விழுப்புரம்–திருவெண்ணெய்நல்லூர் இடையே இருவழி அகலரெயில் பாதையில் பராமரிப்பு பணி தொடங்கியது

விழுப்புரம்– திருவெண்ணெய்நல்லூர் இடையே இருவழி அகல ரெயில் பாதையில் பராமரிப்பு பணி தொடங்கியது. இருவழிப்பாதை விழுப்புரம்–திண்டுக்கல் இடையேயான 272 கி.மீ. தூரத்திற்கு ரூ.1,200 கோடி செலவில் இருவழி அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பண
விழுப்புரம்,
விழுப்புரம்– திருவெண்ணெய்நல்லூர் இடையே இருவழி அகல ரெயில் பாதையில் பராமரிப்பு பணி தொடங்கியது.
இருவழிப்பாதைவிழுப்புரம்–திண்டுக்கல் இடையேயான 272 கி.மீ. தூரத்திற்கு ரூ.1,200 கோடி செலவில் இருவழி அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் கடந்த 2011–ம் ஆண்டு தொடங்கி பகுதி, பகுதியாக நடைபெற்று வருகிறது.
இதில் திருவெண்ணெய்நல்லூர்– விருத்தாசலம் இடையே இருவழிப்பாதை பணிகள் முடிவடைந்து அந்த பாதையில் ரெயில்கள் ஓடுகிறது. இதேபோல் அரியலூர்– மாத்தூர், அரியலூர்– வாலாடி இடையேயும் இருவழிப்பாதை பணிகள் முடிவடைந்து ரெயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
சோதனை ஓட்டம்இதன் தொடர்ச்சியாக விழுப்புரம்– திருவெண்ணெய்நல்லூர் இடையே 16 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருவழிப்பாதை அமைக்கும் பணிகள் முடிந்து ரெயில் போக்குவரத்துக்கு தயார் நிலையில் உள்ளது.
இதனை தொடர்ந்து கடந்த மாதம் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர்(பொறுப்பு) சுதர்சன் நாயக் விழுப்புரம்– திருவெண்ணெய்நல்லூர் இடையே அமைக்கப்பட்டிருந்த இருவழிப்பாதையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அந்த பாதையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
பராமரிப்பு பணிஇந்த நிலையில், விழுப்புரம்– திருவெண்ணெய்நல்லூர் இடையே இருவழிப்பாதையில் இறுதிக்கட்ட பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகள் 25–ந் தேதி (நேற்று) முதல் 30–ந் தேதி வரை நடைபெறும் எனவும், இதன் காரணமாக ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது.
அதன்படி விழுப்புரம்– திருவெண்ணெய்நல்லூர் இடையே இருவழி அகல ரெயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நேற்று தொடங்கியது. இதில் விழுப்புரம் அருகே கண்டம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பழைய தண்டவாளங்களை புதிதாக அமைக்கப்பட்டுள்ள இருவழிப்பாதையுடன் இணைக்கும் பணி நேற்று நடைபெற்றது.
தண்டவாளங்கள் இணைக்கும் பெரிய அளவிலான 4 பொக்லைன் எந்திரங்கள் திருச்சியில் இருந்து வரவழைக்கப்பட்டு அதன் மூலம் பணிகள் நடைபெற்றது. இப்பணியின் போது, தண்டவாள பகுதியில் பொருத்தப்பட்டுள்ள மின்கம்பிகள் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா?, சிக்னல் சரியாக இயங்குகிறதா? என்றும் ஊழியர்கள் சரிபார்த்தனர்.
இந்த பணியால் மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரெயில்களும் தாமதமாக சென்றது. சில ரெயில் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.