குமாரபாளையத்தில் தொழில் அதிபர் வீட்டில் நகைகள் கொள்ளையடித்த வாலிபர் கைது

குமாரபாளையத்தில் தொழில் அதிபர் வீட்டில் நகைகள் கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 33 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர். தொழில் அதிபர் வீட்டில் நகைகள் கொள்ளை குமாரபாளையம் மூலக்காடு கணபதிநகர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன்(வயது63). த
குமாரபாளையம்,
குமாரபாளையத்தில் தொழில் அதிபர் வீட்டில் நகைகள் கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 33 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.
தொழில் அதிபர் வீட்டில் நகைகள் கொள்ளைகுமாரபாளையம் மூலக்காடு கணபதிநகர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன்(வயது63). தொழில் அதிபரான இவர் கடந்த அக்டோபர் மாதம் 10–ந் தேதி வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள மகள் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்று இருந்தார். பின்னர் அவர் 3 நாட்கள் கழித்து வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டின் பூட்டு மற்றும் கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 33 பவுன் நகைகளை யாரோ கொள்ளையடித்து விட்டு சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து குணசேகரன் குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கைதுஇந்தநிலையில் நேற்று குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுதேவன், சப்–இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் குமாரபாளையம் பைபாஸ் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் ஒரு வாலிபர் நின்று கொண்டு இருந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் அவர் ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த நாகராஜ்(28) என்பதும், தொழில் அதிபர் குணசேகரன் வீட்டில் 33 பவுன் நகைகள் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 33 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.