அகில இந்திய பார்வர்டு பிளாக் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்


அகில இந்திய பார்வர்டு பிளாக் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Dec 2016 3:30 AM IST (Updated: 26 Dec 2016 10:26 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தை அடுத்துள்ள பாரதிநகரில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டதை கண்டித்தும், தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும், டி.என்.டி. சாதி சான்ற

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தை அடுத்துள்ள பாரதிநகரில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டதை கண்டித்தும், தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும், டி.என்.டி. சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட பொது செயலாளர் முத்துப்பாண்டி தலைமை தாங்கினார். இதல் மாநில தலைவர் முத்துராமலிங்கம், மாவட்ட செயலாளர் மணிபாரதி, மத்திய குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் நவநீதகிருஷ்ணன், துணை தலைவர் வெங்கடாசலம், விவசாய சங்க தலைவர் இளமாறன், சிவகங்கை மாவட்ட பொது செயலாளர் யோகநாதன், மாணவரணி தலைவர் அடைக்கலம், நயினார்கோவில் ஒன்றிய செயலாளர் சதாசிவம், மாவட்ட குழு உறுப்பினர் ஜோதிபாசு, சாயல்குடி ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி, நயினார்கோவில் ஒன்றிய தலைவர் ரவி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முடிவில் பசும்பொன் பாலாஜி நன்றி கூறினார்.


Next Story