டிஜிட்டல் பரிவர்த்தனை என்ற திசை திருப்புகிறார்கள்: கருப்பு பணத்தை மீட்கும் திட்டம் தோல்வி இந்திய கம்யூனிஸ்டு கருத்து


டிஜிட்டல் பரிவர்த்தனை என்ற திசை திருப்புகிறார்கள்: கருப்பு பணத்தை மீட்கும் திட்டம் தோல்வி இந்திய கம்யூனிஸ்டு கருத்து
x
தினத்தந்தி 27 Dec 2016 3:00 AM IST (Updated: 27 Dec 2016 2:24 AM IST)
t-max-icont-min-icon

கருப்பு பணத்தை மீட்கும் திட்டம் தோல்வியடைந்ததால் டிஜிட்டல் பரிவர்த்தனை என்று திசை திருப்புவதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை மாநில செயலாளர் விசுவநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ஊழல்

புதுச்சேரி,

கருப்பு பணத்தை மீட்கும் திட்டம் தோல்வியடைந்ததால் டிஜிட்டல் பரிவர்த்தனை என்று திசை திருப்புவதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை மாநில செயலாளர் விசுவநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

ஊழல்

ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக இந்திய நாட்டில் வீறுகொண்ட வலுவான போராட்டத்தின் பின்னணியில் அரசியல், சமூக விடுதலை என்ற முழக்கத்தோடு இந்திய கம்யூனிஸ்டு உருவாக்கப்பட்டு 90 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளது. விடுதலைக்குப்பின் தேசவளர்ச்சி, முன்னேற்றம், ஒற்றுமை, ஒருமைப்பாடு, சமூகநீதிக்காக தொடர்ந்து போராடி வருகிறது.

வறுமை, வேலையின்மை, அனைத்து மட்டங்களிலும் ஊழல் மிகப்பெரிய சவாலாக வளர்ந்து நிற்கிறது. காங்கிரஸ் கட்சியின் பொருளாதார கொள்கையை குறிப்பாக பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மோடி அரசு மூர்க்கத்தனமாக அமலாக்கி வருகிறது. நிதி சலுகைகளை வழங்கி வருகிறது. தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்கள் நிர்மூலமாக்கப்படுகிறது.

திட்டம் தோல்வி

அரசியல் சட்டம் அளித்துள்ள பேச்சுரிமை, கருத்துரிமை பறிக்கப்படுகிறது. மதவாதத்தை முன்னிறுத்தி மக்களை பிளவுபடுத்தி வருகிறது. மேலும் ஜனநாயகத்தை குறிப்பாக நாடாளுமன்ற ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயல்பாடு அதிகரித்துள்ளது. கருப்பு பணத்தை மீட்டெடுக்கிறோம் என்றுகூறி பணம் மதிப்பற்ற நடவடிக்கையால் நாட்டின் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் மீது மிகப்பெரிய தாக்குதலை மோடி அரசு நடத்தியுள்ளது.

அத்தகைய திட்டம் தோல்வி அடைந்துள்ள நிலையில் பணபரிமாற்ற டிஜிட்டல் பரிவர்த்தனை என்ற மக்களை திசை திருப்பி விவசாயிகள், தொழிலாளர்கள், சில்லரை வணிகர்கள் என அனைத்து மக்களையும் ஏமாற்றி வருகிறது. எனவே கட்சியின் 91–வது ஆண்டு அமைப்பு தினத்தில் நவீன தாராளமய கொள்கைக்கு எதிராகவும், சாதிய ரீதியிலான ஒடுக்குமுறை, மதவெறி கொள்கைக்கு எதிராக ஜனநாயகத்தை மீட்டெடுக்கவும், உழைக்கும் மக்களின் நலன் பாதுகாத்திடவும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி உறுதியேற்கிறது.

இவ்வாறு விசுவநாதன் கூறியுள்ளார்.


Next Story