கும்மிடிப்பூண்டி அருகே தொழிற்சாலை முன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டியை அடுத்த பாத்தபாளையம் கிராமத்தில் இருந்து போடிரெட்டிகண்டிகை கிராமத்துக்கு செல்லும் வழியில் தனியார் தொழிற்சாலை உள்ளது. இதன் ரசாயன கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக கூறி அந்த தொழிற்சாலை முன்பு அப்பகுதி மக்கள் சுமார் 30 பேர் ஆர்ப்பாட
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டியை அடுத்த பாத்தபாளையம் கிராமத்தில் இருந்து போடிரெட்டிகண்டிகை கிராமத்துக்கு செல்லும் வழியில் தனியார் தொழிற்சாலை உள்ளது. இதன் ரசாயன கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக கூறி அந்த தொழிற்சாலை முன்பு அப்பகுதி மக்கள் சுமார் 30 பேர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், இதுபற்றி அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Next Story