தொழில் நிறுவனங்கள் தொழிலாளர் நல நிதியை செலுத்த கெடு விதிப்பு தொழிலாளர் நல வாரியம் அறிவிப்பு


தொழில் நிறுவனங்கள் தொழிலாளர் நல நிதியை செலுத்த கெடு விதிப்பு தொழிலாளர் நல வாரியம் அறிவிப்பு
x
தினத்தந்தி 28 Dec 2016 1:15 AM IST (Updated: 27 Dec 2016 8:58 PM IST)
t-max-icont-min-icon

தொழிலாளர் நல நிதியை 2017 ஜனவரி 31–ந்தேதிக்குள் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் கெடு விதித்துள்ளது. இது தொடர்பாக அந்த வாரியம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;– தொழிலாளர் நல நிதி தொழிலாளர் நல நி

தூத்துக்குடி,

தொழிலாளர் நல நிதியை 2017 ஜனவரி 31–ந்தேதிக்குள் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் கெடு விதித்துள்ளது.

இது தொடர்பாக அந்த வாரியம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;–

தொழிலாளர் நல நிதி

தொழிலாளர் நல நிதி சட்டம் பிரிவு 2–ன் படி தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், மலை தோட்ட நிறுவனங்கள், 5 அல்லது அதற்கு மேல் தொழிலாளர்கள் பணியாற்றும் கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் ஒவ்வொரு தொழிலாளிக்கும், தொழிலாளியின் பங்காக ரூ.10 அவர்களுடைய டிசம்பர் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்து, அதனுடன் ஒவ்வொரு தொழிலாளிக்கும் வேலையளிப்பவர் பங்காக ரூ.20 சேர்த்து, மொத்தம் ரூ.30–ஐ தொழிலாளர் நல நிதிக்கு பங்கு தொகையாக நிறுவனம் வழங்க வேண்டும்.

நிதியை செலுத்த கெடு

அதன்படி இந்த ஆண்டுக்கான தொழிலாளர் நல நிதியினை 2017 ஜனவரி மாதம் 31–ந்தேதிக்குள் செலுத்த வேண்டும். தொழிலாளர் நல நிதியை செலுத்த தவறினால், தமிழ்நாடு தொழிலாளர் நல சட்ட பிரிவு 28–ன் படி வருவாய் வரி வசூல் சட்டத்தின் கீழ், அபராதத்துடன் வசூலிக்கப்படும்.

செலுத்துவது எப்படி?

இந்த ஆண்டுக்கான தொகையை,‘ செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், டி.எம்.எஸ். வளாகம், தேனாம்பேட்டை சென்னை 600 006’ என்ற முகவரிக்கு வங்கி வரைவோலை மூலமாக அனுப்பி வைக்க வேண்டும், என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story