மின் கட்டணம் செலுத்தாததால் குடிநீர் வினியோகம் பாதிப்பு நடவடிக்கை எடுக்க நகராட்சி ஆணையரிடம் மனு

மின் கட்டணம் செலுத்தாததால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர். பொதுமக்கள் மனு புதுக்கோட்டை நகராட்சி டி.வி.எஸ்.கார்னர் அருகே உள்ள மருப்பணி சாலையில் தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய குடியிருப்ப
புதுக்கோட்டை,
மின் கட்டணம் செலுத்தாததால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.
பொதுமக்கள் மனு
புதுக்கோட்டை நகராட்சி டி.வி.எஸ்.கார்னர் அருகே உள்ள மருப்பணி சாலையில் தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதியை சேர்ந்த சுமார் 50–க்கும் மேற்பட்டவர்கள் நேற்று புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் நகராட்சி ஆணையரிடம் ஒரு மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–
நாங்கள் தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளில் வசித்து வருகிறோம். இங்கு சுமார் 240 வீடுகள் உள்ளன. இந்த வீடுகளுக்கு அந்த பகுதியில் உள்ள பொது ஆழ்குழாய் கிணறு மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. மேலும் மின்மோட்டார் உதவியுடன் நகராட்சி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இதற்குரிய மின்கட்டணத்தை நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் செலுத்தப்பட்டு வந்தது.
மின் கட்டணம் செலுத்த வேண்டும்
இந்த நிலையில் தற்போது நகராட்சி சார்பில் மின்கட்டணம் செலுத்தாததால் மின் இணைப்பை மின்சார வாரிய அதிகாரிகள் துண்டித்து விட்டனர். இதனால் எங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால், நாங்கள் கடும் அவதி அடைந்து உள்ளோம். எனவே இது குறித்து நகராட்சி ஆணையர் உடனடியாக நடவடிக்கை எடுத்து நகராட்சியின் மூலம் செலுத்தி வந்த மின் கட்டணத்தை உடனடியாக செலுத்தி, எங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.