மாநகர பஸ்சில் டேங்க் உடைந்து டீசல் கொட்டியதால் பரபரப்பு பொதுமக்கள் பாத்திரத்தில் பிடித்துசென்றனர்


மாநகர பஸ்சில் டேங்க் உடைந்து டீசல் கொட்டியதால் பரபரப்பு பொதுமக்கள் பாத்திரத்தில் பிடித்துசென்றனர்
x
தினத்தந்தி 30 Dec 2016 5:00 AM IST (Updated: 30 Dec 2016 1:07 AM IST)
t-max-icont-min-icon

ஆலந்தூர், மாநகர பஸ்சில் டேங்க் உடைந்து சாலையில் டீசல் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. டீசலை பொதுமக்கள் பாத்திரத்தில் பிடித்து சென்றனர். டேங்க் உடைந்து டீசல் கொட்டியது சென்னை திருவான்மியூரில் இருந்து கிழக்கு தாம்பரத்துக்கு நேற்று காலை மாநகர பஸ் ஒன்று செ

ஆலந்தூர்,

மாநகர பஸ்சில் டேங்க் உடைந்து சாலையில் டீசல் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. டீசலை பொதுமக்கள் பாத்திரத்தில் பிடித்து சென்றனர்.

டேங்க் உடைந்து டீசல் கொட்டியது

சென்னை திருவான்மியூரில் இருந்து கிழக்கு தாம்பரத்துக்கு நேற்று காலை மாநகர பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பெருங்குடி கந்தன்சாவடி அருகே மாநகர பஸ் வந்தபோது திடீரென பஸ்சில் உள்ள டீசல் டேங்க் உடைந்து அதில் இருந்த டீசல் சாலையில் கொட்டியது.

இதை பார்க்காமல் பஸ்சை டிரைவர் தொடர்ந்து ஓட்டிச்சென்றார். பஸ்சில் இருந்த டீசல் சாலையில் கொட்டியபடியே சென்றதால் பஸ்சுக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அடுத்தடுத்து சாலையில் வழுக்கி விழுந்தனர்.

பொதுமக்கள் பிடித்து சென்றனர்

பஸ்சில் இருந்து டீசல் கொட்டுவது குறித்து வாகன ஓட்டிகள் சிலர் பஸ் டிரைவருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக பஸ்சை நிறுத்தி விட்டு டிரைவர் மற்றும் பயணிகள் கீழே இறங்கினர். டிரைவர், கண்டக்டர் முயற்சி செய்தும் டீசல் வெளியேறுவதை தடுக்க முடியாததால் டேங்கில் இருந்து தொடர்ந்து டீசல் மளமளவென கொட்டியபடி இருந்தது.

இதுபற்றி தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் பாத்திரங்களை கொண்டு வந்து டீசலை பிடித்து சென்றனர். இது பற்றி மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஊழியர்கள், பஸ்சை அங்கிருந்து எடுத்துச் சென்றனர்.

சாலையில் டீசல் கொட்டியபோது நல்லவேளையாக தீப்பிடிக்காததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Next Story