மானாமதுரையில் பயங்கர தீவிபத்து; 10–க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசம்


மானாமதுரையில் பயங்கர தீவிபத்து; 10–க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 1 Jan 2017 4:15 AM IST (Updated: 31 Dec 2016 6:39 PM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை பஸ் நிலைய பகுதியில் இருந்த கடைகளில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில், 10–க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாயின. தீவிபத்து சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பழைய பஸ் நிலையம் எதிரே ஒரே வரிசையில் பல ஆண்டுகளுக்கும் மேலாக டீக்கடை, பழக்கடை, பூக்கடை, மண்பாண்

மானாமதுரை,

மானாமதுரை பஸ் நிலைய பகுதியில் இருந்த கடைகளில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில், 10–க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாயின.

தீவிபத்து

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பழைய பஸ் நிலையம் எதிரே ஒரே வரிசையில் பல ஆண்டுகளுக்கும் மேலாக டீக்கடை, பழக்கடை, பூக்கடை, மண்பாண்ட கடைகள் என சுமார் 30–க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் பெரும்பாலான கடைகள் குடிசைகளாகவும், தகரத்தாலும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த கடைகளின் அருகே சாலையோரங்களில் ஏராளமான மரங்களும் உள்ளன. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் இங்குள்ள வியாபாரிகள், தங்களது கடைகளை அடைத்துவிட்டு சென்றனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் எதிர்பாராத விதமாக பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. ஒரு கடையில் பற்றிய தீ, மளமளவென அருகில் இருந்த மற்ற கடைகளிலும் பரவின. இதில் சுமார் 10–க்கும் மேற்பட்ட கடைகள் முற்றிலும் எரிந்து நாசமாயின. மேலும் சில கடைகளில் லேசான சேதம் ஏற்பட்டது.

எரிந்து நாசம்

தீவிபத்து ஏற்பட்ட சில நிமிடங்களிலேயே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள், இதுகுறித்து மானாமதுரை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். ஆனால் மானாமதுரை தீயணைப்பு நிலையத்தில் போதிய தீயணைப்பு வாகனம் இல்லாததால், சிவகங்கை, திருப்பத்தூர் என வெளியூரில் இருந்து 4–க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. பின்னர் தீயணைப்பு படையினர் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தால் 10–க்கும் மேற்பட்ட கடைகளில் இருந்த லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. இதேபோல் கடைகளின் அருகில் இருந்த மரங்களிலும் தீப்பரவியதில், அவையும் தீக்கறைகளாயின.

விசாரணை

மேலும் இதுகுறித்து கடைகளின் உரிமையாளர்கள் கொடுத்த புகாரின்பேரில் மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிபத்திற்கான காரணங்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தை தாசில்தார் சிவகுமார், வருவாய் கோட்டாட்சியர் அரவிந்தன் ஆகியோர் பார்வையிட்டு, உரிய நிவாரணம் கிடைக்க பரிந்துரை செய்யப்படும் என்று பாதிக்கப்பட்டவர்களிடம் கூறினர்.


Next Story