ஊருக்குள் புகுந்த சிறுத்தைப்புலி ஆட்டை கடித்து கொன்றது பொதுமக்கள் பீதி

பவானிசாகர் அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தைப்புலி ஆட்டை கடித்து கொன்று மீண்டும் அட்டகாசம் செய்து உள்ளதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
பவானிசாகர்,
கூண்டு வைக்கப்பட்டு...
பவானிசாகர் அருகே உள்ள கொத்தமங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட கிராமம் போக்கனாக்கரை. இந்த கிராமம் பவானிசாகர் வனப்பகுதியையொட்டி உள்ளது. கடந்த மாதம் 23-ந் தேதி போக்கனாக்கரை கிராமத்துக்குள் புகுந்த சிறுத்தைப்புலி ஒன்று அந்த கிராமத்தை சேர்ந்த சிங்காரி, ஆறுமுகம், அமராவதி கவுண்டர் ஆகியோருடைய 3 ஆடுகளை அடித்து கொன்றது. இதனால் பீதி அடைந்த போக்கனாக்கரை கிராமத்தை சேர்ந்த கிராம பொதுமக்கள், சிறுத்தைப்புலியை பிடிக்க வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து சிறுத்தைப்புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க போக்கனாக்கரை கிராமத்தில் மொத்தம் 7 இடங்களில் தானியங்கி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. மேலும் சிறுத்தைப்புலியை பிடிக்க அந்த கிராமத்தில் கூண்டு வைக்கப்பட்டு அதில் ஒரு ஆட்டையும் வனத்துறையினர் கட்டி வைத்தனர்.
தப்பி ஓடியது
ஆனால் 24-ந் தேதி அந்த சிறுத்தைப்புலி போக்கனாக்கரை கிராமத்துக்கு அருகில் உள்ள துண்டன்சாலை என்ற கிராமத்துக்குள் புகுந்தது. அந்த கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவரின் ஆட்டை கடிக்க பதுங்கி நின்றது. அப்போது முருகன் மற்றும் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் இதை கவனித்து சத்தம் போட்டதால் சிறுத்தைப்புலி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
இதுபற்றி அறிந்ததும் வனத்துறையினர் துண்டன்சாலை கிராமத்துக்கு சென்று சிறுத்தைப்புலியை பிடிக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதையடுத்து சில நாட்களாக சிறுத்தைப்புலியின் நடமாட்டத்தை காணமுடியவில்லை.
ஆட்டை கவ்வியது
இந்த நிலையில் போக்கனாக்கரை கிராமத்துக்கு அருகில் உள்ள உப்புபள்ளம் என்ற பகுதியில் சிறுத்தைப்புலியின் நடமாட்டத்தை அந்த வழியாக சென்ற பள்ளிக்கூட மாணவ- மாணவிகள் நேற்று முன்தினம் பார்த்து உள்ளனர் உடனே பயத்தில் அவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஊருக்குள் ஓடி விவரத்தை கூறினர். உடனே வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு பதிவான கால் தடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அது சிறுத்தைப்புலியின் கால் தடம் தான் என தெரியவந்தது.
இந்த நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் போக்கனாக்கரை கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 45) என்ற விவசாயி தன்னுடைய ஆட்டை அங்குள்ள விவசாய நிலத்தில் நீளமான கயிற்றில் கட்டி மேய விட்டிருந்தார். அதன் அருகே குட்டி ஆடும் மேய்ந்து கொண்டிருந்தது. சுரேஷ் சிறிது தூரத்தில் உட்கார்ந்திருந்தார்.
அப்போது அங்கு வந்த சிறுத்தைப்புலி, மேய்ந்து கொண்டிருந்த ஆட்டின் கழுத்தை கவ்வி பிடித்தது.
பொதுமக்கள் பீதி
இதை பார்த்த சுரேஷ் ‘சிறுத்தைப்புலி ஆட்டை கடிக்கிறது’ என்று சத்தம் போட்டு கத்தினார். பின்னர் அவர் சுதாரித்துக்கொண்டு, அங்கு கிடந்த கல்லை எடுத்து சிறுத்தைப்புலியை நோக்கி வீசினார். இதற்கிடையே சுரேசின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் ஆட்டை கடித்து கொன்று போட்டுவிட்டு சிறுத்தைப்புலி தப்பி ஓடி அருகில் இருந்த புதருக்குள் சென்று மறைந்து கொண்டது. மேலும் சிறுத்தைப்புலி ஆட்டுக்குட்டியையும் கடித்துள்ளது. அது லேசான காயத்துடன் உயிர் தப்பியது. இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீப் போல் பரவியதை தொடர்ந்து விவசாய நிலங்களில் மாடு மற்றும் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தவர்கள் தங்களுடைய மாடு மற்றும் ஆடுகளை உடனே வீட்டுக்கு ஓட்டி வந்து பட்டியில் அடைத்தனர். பகல் நேரத்திலேயே சிறுத்தைப்புலி கிராமத்துக்குள் புகுந்ததால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதியில் உறைந்து போய் உள்ளனர்.
ஆலோசனை
இதுபற்றி அறிந்ததும் கோபி சப்-கலெக்டர் கிருஷ்ணன் உண்ணி, சத்தியமங்கலம் தாசில்தார் கிருஷ்ணன், சத்தியமங்கலம் மாவட்ட வன அதிகாரி அருண்லால், வனச்சரகர் பெர்னாட் மற்றும் வனத்துறையினர், வருவாய்த்துறையினர் போக்கனாக்கரை கிராமத்துக்கு விரைந்து சென்று சிறுத்தைப்புலியால் கொல்லப்பட்ட ஆட்டை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் சிறுத்தைப்புலியை பிடிப்பது குறித்து வனத்துறையினருடன் சப்-கலெக்டர் கிருஷ்ணன் உண்ணி ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘சிறுத்தைப்புலி இதுவரை போக்கனாக்கரை கிராமத்தில் 4 ஆடுகளை அடித்து கொன்று உள்ளது. சிறுத்தைப்புலியை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து உள்ளனர். சிறுத்தைப்புலியை பிடிக்க முடியவில்லை. ஆனால் சிறுத்தைப்புலி மீண்டும் மீண்டும் வந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் நாங்கள் எங்களுடைய விவசாய நிலங்களுக்கு சென்று வேலை செய்ய முடியவில்லை. பள்ளிக்கூடங்களுக்கு எங்கள் குழந்தைகளை அனுப்ப பயமாக இருக்கிறது. எனவே வனத்துறையினர் விரைந்து செயல்பட்டு போக்கனாக்கரையில் அட்டகாசம் செய்து வரும் சிறுத்தைப்புலியை பிடிக்க வேண்டும்,’ என்று தெரிவித்தனர்.

Next Story