அரியலூரில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அரியலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் அரியலூர் அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம்
அரியலூர்,
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அரியலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் அரியலூர் அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிவசங்கர் தலைமை தாங்கினார். மாநில இளைஞர் அணி இணை செயலாளர் சுபா.சந்திரசேகர் முன்னிலை வகித்தார். இதில் ஏராளமான தி.மு.க. தொண்டர்கள் ஜல்லிக்கட்டு காளையுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் ஞானமூர்த்தி, ஜோதிவேல், கென்னடி, அவைத்தலைவர் துரைராஜ், நகர செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story