மரக்கடையில் தீ விபத்து


மரக்கடையில் தீ விபத்து
x
தினத்தந்தி 16 Jan 2017 4:15 AM IST (Updated: 16 Jan 2017 2:57 AM IST)
t-max-icont-min-icon

மரக்கடையில் தீ விபத்து மதியம் 2 மணியளவில் கடையில் திடீரென்று தீப்பிடித்து எரிந்துள்ளது.

சங்கரன்கோவில்,

சங்கரன்கோவில் லெட்சுமியாபுரம் 2-ம் தெருவை சேர்ந்தவர் பாடாலிங்கம் (வயது 70). இவர் சங்கரன்கோவில் பாரதியார் நகர் 2-ம் தெருவில் மரக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலை 11 மணி அளவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடையில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். பின்னர் கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். மதியம் 2 மணியளவில் கடையில் திடீரென்று தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதனால் அருகில் இருந்தவர்கள் சங்கரன்கோவில் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தீ அதிகமாக பற்றி எரிந்ததால் சுரண்டை, வாசுதேவநல்லுாரில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. தீயணைப்பு நிலைய அதிகாரி அருணாச்சலம் தலைமையில் வீரர்கள் தீயை அணைத்தனர். சுமார் 3 மணி நேரம் போராடி தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. விபத்து குறித்து சங்கரன்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story