தி.மு.க. சார்பில் பொங்கல் விளையாட்டு போட்டி
தூத்துக்குடியில் தி.மு.க. சார்பில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கீதாஜீவன் எம்.எல்.ஏ. பரிசு வழங்கினார்.
தூத்துக்குடி,
கோலப்போட்டி
தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. தொண்டர் அணி சார்பில் பொங்கல் விழாவை முன்னிட்டு, கோலப்போட்டி உள்ளிட்ட பல போட்டிகள் மில்லர்புரம் பர்மா காலனி பகுதியில் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் ராமர் தலைமை தாங்கினார். சங்கரநாராயணன், அமிர்தநாயகம், மாசிலாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. மாநில மகளிர் அணி துணை அமைப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பரிசளிப்பு
கோலப்போட்டியில் சுமார் 350 பேர் கலந்து கொண்டனர். போட்டியில் முதல் பரிசாக 2 கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டது. 2-வது பரிசாக குக்கர், 3-வது பரிசாக மின்விசிறி, 4-வது பரிசாக குக்கர் வழங்கப்பட்டது. போட்டி யில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு கீதாஜீவன் எம்.எல்.ஏ. பரிசுகள் வழங்கினார்.

Next Story