100–வது பிறந்தநாள் விழா: எம்.ஜி.ஆர். சிலைக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
எம்.ஜி.ஆர். 100–வது பிறந்தநாள் விழாவையொட்டி, நாகர்கோவிலில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
நாகர்கோவில்,
அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதல்–அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 100–வது பிறந்தநாள் விழா நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாகர்கோவில் வடசேரி சந்திப்பில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
அ.தி.மு.க.
குமரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாகர்கோவில் வடசேரியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் அய்யப்பன், ராஜாராம், ஜெயசீலன், கனகராஜன், கோட்டார் கிருஷ்ணன், வக்கீல் கனகராஜ், சதானந்தம், ஜீன்ஸ், தாணுப்பிள்ளை, சந்திரன், கோணம் செல்வகுமார், செல்வின்குமார், சூப்பர்ராதா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் முன்னாள் அமைச்சரும், எம்.ஜி.ஆர்.மன்ற மாவட்ட செயலாளருமான கே.டி.பச்சைமால் தலைமை தாங்கி, எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் எஸ்.ஏ.அசோகன், சந்தோஷ், ராஜன், பாலஜனாதிபதி, சந்துரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தே.மு.தி.க.– ம.தி.மு.க.
குமரி கிழக்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபிரபாகர் தலைமை தாங்கினார். இதில் நகர செயலாளர் சுரேஷ், வக்கீல் அணி செயலாளர் பொன்.செல்வராஜன், நிர்வாகிகள் அமுதன், தங்க கிருஷ்ணன், ராஜேஸ்வரி, கலைமணி, வைகுண்டமணி, ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்ட ம.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் வக்கீல் வெற்றிவேல் தலைமை தாங்கினார். இதில் நகர செயலாளர் ஜெரால்டு ஹெக்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ச.ம.க.
குமரி மாவட்ட ச.ம.க. சார்பில் மாவட்ட செயலாளர் அரசன் பொன்ராஜ் தலைமையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் புளியடி பால்ராஜ், நிர்வாகிகள் ரவிக்குமார், மைக்கேல், கால்டுவின், எட்வின், கரீம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா ஆதரவாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பிலும் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Next Story