செல்போன் வெளிச்சத்தில் ஒளிமயமான மெரினா


செல்போன் வெளிச்சத்தில் ஒளிமயமான மெரினா
x
தினத்தந்தி 20 Jan 2017 3:57 AM IST (Updated: 20 Jan 2017 3:57 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மெரினா விவேகானந்தர் இல்லம் அருகே 3 நாட்களாக இளைஞர்கள், மாணவர்கள் வித்தியாசமான முறையில் போராட்டத்தை முன்னெடுத்து செல்கின்றனர்.

சென்னை மெரினா விவேகானந்தர் இல்லம் அருகே 3 நாட்களாக இளைஞர்கள், மாணவர்கள் வித்தியாசமான முறையில் போராட்டத்தை முன்னெடுத்து செல்கின்றனர்.

கடும் குளிர், வெயிலை தாங்கி, உறக்கம் இல்லாமல் அவர்கள் போராட்டம் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. நேற்று இரவு 6 மணிக்கு மேல் போராட்டக்காரர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் செல்போன் டார்ச் லைட்டை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வானத்து நட்சத்திரங்களே பூமிக்கு இறங்கி வந்து போராட்டம் நடத்தியது போல் இந்த காட்சி அமைந்தது. மெரினா கடற்கரை முழுவதும் ஒளிமயமாக காட்சியளித்தது. இந்த ஒளிவெள்ளம் தமிழர்கள் வாழ்விலும் ஒளியேற்றும் என்று அப்போது அவர்கள் முழக்கமிட்டனர். 

Next Story