கட்சி நிர்வாகிகளுடன் உத்தவ் தாக்கரே அவசர ஆலோசனை கூட்டணி குறித்த முடிவை நாளை அறிவிக்கிறார்

மும்பை, 227 வார்டுகளுக்கும் வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்ட நிலையில் சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அவர் பா.ஜனதாவுடனான கூட்டணி குறித்த முடிவை நாளை அறிவிக்க உள்ளார்
.கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி
மும்பை மாநகராட்சி தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லை. வருகிற 27-ந் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.
இந்தநிலையில் சிவசேனா- பா.ஜனதா கூட்டணி அமைவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இருகட்சி நிர்வாகிகளின் பேச்சுவார்த்தையில் இதுவரை எந்த உறுதியான முடிவும் எட்டப்படவில்லை. கூட்டணி குறித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும், சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரேயும் இதுவரை எதையும் சொல்லவில்லை.
சிவசேனா, பா.ஜனதாவிற்கு 60 இடங்கள் மட்டுமே கொடுக்க பிடிவாதமாக இருப்பதே இந்த இழுபறிக்கு காரணம் என கூறப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கிங்சர்க்கிள் சண்முகானந்தா அரங்கில் மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அப்போது பேசிய உத்தவ்தாக்கரே, ‘பா.ஜனதாவுடனான கூட்டணி குறித்த இறுதி முடிவை 26-ந்தேதி(நாளை) அறிவிப்பேன்’ என்றார்.
அவசர கூட்டம்
இந்தநிலையில் நேற்று உத்தவ்தாக்கரே இல்லமான மாதோஸ்ரீயில் கட்சி நிர்வாகிகளின் அவசர கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சஞ்சய்ராவுத் எம்.பி., மந்திரி ராம்தாஸ் கதம், கஜானன் கீர்த்திகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் மும்பை மாநகராட்சி தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்க வேண்டுமா, வேண்டாமா? என்பது குறித்து பேசியதாக கூறப்படுகிறது. மேலும் கட்சி நிர்வாகிகள் மும்பை மாநகராட்சி தேர்தலில் 227 வார்டுகளிலும் போட்டியிட தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள வேட்பாளர்களின் பட்டியலை கொடுத்ததாகவும் தெரிகிறது.
மும்பை தவிர நாக்பூர், புனே, தானே ஆகிய மாநகராட்சி தேர்தலை எப்படி சந்திப்பது என்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
நாளை அறிவிப்பு
227 வார்டுகளுக்கும் வேட்பாளர் பட்டியல் தயாராக இருப்பதால் அந்த கட்சி மும்பை மாநகராட்சி தேர்தலை தனித்து சந்திக்கவும் தயாராகி வருவது தெரிகிறது. மேலும் அக்கட்சியினர் மும்பை, தானே பகுதியில் பிரமாண்ட விளம்பர பேனர்களை வைக்க தொடங்கி உள்ளனர்.
அந்த விளம்பரங்களில், ‘நமது தலைவர் பால்தாக்கரே’, ‘நமது சிவசேனா, நமது மும்பை’, ‘எதை சொல்வோமோ அதை செய்வோம்’ உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த பலகைகளில் பா.ஜனதா கட்சியின் எந்த அடையாளமும் இல்லை. உத்தவ்தாக்கரே, பால் தாக்கரேயின் படங்கள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் நாளை உத்தவ் தாக்கரே கூட்டணி குறித்து என்ன முடிவை அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story