சிவசேனா பிரமுகர் வீட்டில் பதுக்கப்பட்ட சாராயம் பறிமுதல் 2 பேர் கைது


சிவசேனா பிரமுகர் வீட்டில் பதுக்கப்பட்ட சாராயம் பறிமுதல் 2 பேர் கைது
x
தினத்தந்தி 12 Feb 2017 4:43 AM IST (Updated: 12 Feb 2017 4:43 AM IST)
t-max-icont-min-icon

பால்கர் சிவசேனா கட்சி பிரமுகர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பால்கர்

பால்கர் சிவசேனா கட்சி பிரமுகர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

புகார்

பால்கர் மாவட்டத்தில் கோகிவாரா மற்றும் ராஜோடி பகுதிகளில் சாராயம் காய்ச்சப்பட்டு வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

முதற்கட்ட சோதனையில், அங்குள்ள தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.1 லட்சத்து 19 ஆயிரம் மதிப்புள்ள 200 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

2 பேர் கைது


இந்தநிலையில் பால்கர் மாவட்ட சிவசேனா கட்சி பிரமுகர் நரேஷ் போகிர் வீட்டிலும் சாராயம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அவரின் வீட்டிலும் அதிரடியாக நுழைந்து சோதனை மேற்கொண்டனர். இதில், அவர் வீட்டின் குளியல் அறையில் பேரல்களில் சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபடித்து பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து பால்கர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் சோதனை செய்வதை தடுத்ததாக பெண் ஹாசுபாய் போகிர் மற்றும் கிஷன் போகிர் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

Next Story