ஜமைக்காவில் மும்பை வாலிபர் சுட்டுக்கொலை

ஜமைக்காவில் மும்பை வாலிபர் கொள்ளையர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.
மும்பை
ஜமைக்காவில் மும்பை வாலிபர் கொள்ளையர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.
வசாய் வாலிபர்மும்பை அருகே உள்ள வசாய், அம்பாடி ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (25). இவர் கல்லூரி படிப்பை முடித்த பின் ஜமைக்கா நாட்டிற்கு சென்றார். இவர் கிங்ஸ்டன் பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்தார்.
இந்தநிலையில் கடந்த வியாழன் அன்று ராகேஷ் தனது நண்பர்களுடன் கிங்ஸ்டன் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்தார். அப்போது வீட்டிற்குள் கொள்ளையர்கள் 4 பேர் துப்பாக்கியுடன் நுழைந்த கொள்ளையர்கள் ராஜேசை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதில் ராகேசின் உடலில் 3 குண்டுகள் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். அவரது வீட்டில் தங்கியிருந்த மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். பின்னர் கொள்ளையர்கள் வீட்டில் இருந்த பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
தகவல்இதுகுறித்து நகைக்கடையின் உரிமையாளர் நேற்று முன்தினம் ராஜேசின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தார். மகன் பலியான தகவல் கேட்டு பெற்றோர் அதிர்ச்சியில் கதறி அழுதனர்.
இதுகுறித்து ராஜேசின் உறவினர் ஒருவர் கூறும்போது:–
ராஜேஷ் வாரந்தோறும் எங்களிடம் பேசுவார். இந்த ஆண்டு ஊருக்கு வருவதாக கூறியிருந்தார். ஆனால் அவர் உடல் மட்டும் வரும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. ராஜேசை கொலை செய்தவர்களை பிடிக்க இந்திய வெளியுறவுத்துறை, ஜமைக்கா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல படுகாயம் அடைந்த மற்ற 2 பேரில் ஒருவர் உல்லாஸ்நகரையும் மற்றொருவர் கேரள மாநிலத்தையும் சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது.