கலவை அருகே பள்ளிகூட வேன் மோதி சைக்கிளில் வந்த முதியவர் பலி


கலவை அருகே பள்ளிகூட வேன் மோதி சைக்கிளில் வந்த முதியவர் பலி
x
தினத்தந்தி 13 Feb 2017 3:45 AM IST (Updated: 13 Feb 2017 3:01 AM IST)
t-max-icont-min-icon

கலவை அருகே பள்ளிக்கூட வேன் மோதியதில் சைக்கிளில் சென்ற முதியவர் பலியானார். இது குறித்து கலவை போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது :– கலவை அருகே உள்ள கலவைபுத்தூர் கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி(65) இவர் நேற்று முன்தினம் மா

 

ராணிப்பேட்டை,

கலவை அருகே பள்ளிக்கூட வேன் மோதியதில் சைக்கிளில் சென்ற முதியவர் பலியானார். இது குறித்து கலவை போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது :–

கலவை அருகே உள்ள கலவைபுத்தூர் கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி(65) இவர் நேற்று முன்தினம் மாலை சைக்கிளில் அருகே உள்ள வேம்பி கிராமத்திற்கு சென்று விட்டு பின்னர் கலவை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பள்ளி வேன் முதியவர் சுப்பிரமணி மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தார். இதுபற்றி தகவலறிந்த கலவை போலீசார் முதியவர் சுப்பிரமணி பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story