நாகையில் மாணவர்கள், இளைஞர்கள் சீமைக்கருவேல மரங்களை அகற்றினர்


நாகையில் மாணவர்கள், இளைஞர்கள் சீமைக்கருவேல மரங்களை அகற்றினர்
x
தினத்தந்தி 13 Feb 2017 4:15 AM IST (Updated: 13 Feb 2017 3:03 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் மாணவர்கள், இளைஞர்கள் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

ஐகோர்ட்டு உத்தரவு

மதுரை ஐகோர்ட்டு தமிழகத்தில் 13 மாவட்டங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டது. மேலும், மாவட்ட நீதிபதிகளின் மேற்பார்வையில் அந்த பணிகளை விரைவுபடுத்துவதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 5 வக்கீல்கள் கொண்ட குழுவையும் அமைத்தது. அதைதொடர்ந்து தமிழகம் முழுவதும் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி

இந்த நிலையில் நாகையில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று நாகை புத்தூர் பகுதியில் நாகை மாவட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் நடைபெற்றன. இதில் நாகை மாவட்டத்தை சேர்ந்த திரளான மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டு சீமைக்கருவேல மரங்களை அரிவாள், கோடரி உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு வெட்டி அகற்றி தீயிட்டு கொளுத்தினர். பல்வேறு தீங்குகளை விளைவிக்கும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற மாணவர்களும், இளைஞர்களும் களம் இறங்கியுள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்திற்கு மாணவர்களும், இளைஞர்களும் ஒன்று திரண்டதால் தற்போது ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டுள்ளது. அதேபோல் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியில் மாணவர்களும், இளைஞர்களும் களம் இறங்கி உள்ளதால் இன்னும் சில ஆண்டுகளில் சீமைக்கருவேல மரங்கள் அறவே அகற்றப்பட்டு விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

Next Story