கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லாரிகள் திருடிய 3 பேர் கைது


கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லாரிகள் திருடிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 13 Feb 2017 4:30 AM IST (Updated: 13 Feb 2017 3:05 AM IST)
t-max-icont-min-icon

கரூர் உள்ளிட்ட மாவட் டங்களில் லாரிகள் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தோகைமலை,

லாரிகள் திருட்டு

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தை அடுத்த கொண்டப்பநாயக்கன்பட்டி அருகே உள்ள வடுகபட்டியை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது39). இவர் சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். இவர், கடந்த 10-ந் தேதி இரவு குளித்தலை காவிரி ஆற்றில் உள்ள மணல் குவாரிக்கு மணல் ஏற்ற லாரியை ஓட்டி வந்து கொண்டிருந்தார்.

தோகைமலை காவல்சரகம் கொசூர் அருகே வந்த போது, சரவணகுமாருக்கு தூக்கம் வந்ததால் லாரியை சாலையோரம் நிறுத்தி விட்டு அருகில் உள்ள கடையில் படுத்து தூங்கினார்.

பின்னர் அதிகாலை எழுந்து பார்த்த போது லாரி திருட்டு போய் இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து தோகைமலை போலீசில் சரவணக்குமார் புகார் செய்தார். இதேபோல லாலாபேட்டை பகுதியில் நிறுத்தி இருந்த மற்றொரு லாரியும் திருட்டு போய் இருந்தது. இதில் ஈடுபட்டவர்களை பிடிக்க கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் உத்தரவின்பேரில், குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் மேற்பார்வையில் தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.

கைது

இந்நிலையில், குளித்தலை அண்ணா நகரை சேர்ந்த மணிகண்டன் (32) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவரும், திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள திருஈங்கோய்மலையை சேர்ந்த துரைராஜ் மகன் சந்திரமோகன் (21), தொட்டியம் அழகரையை சேர்ந்த பாலகுமார் (19) ஆகிய 3 பேரும் சேர்ந்து லாரிகளை திருடியதை ஒப்புக் கொண்டனர்.

அதோடு கிருஷ்்ணகிரி மாவட்டம் உத்தனபள்ளி, கிளமங்களம் பகுதியிலும் லாரிகளை திருடியதை ஒப்புக்கொண்டனர். மேலும் திருடிய லாரிகளை மதுரை தனக்கன்குளம் பகுதியை சேர்ந்த கல்யாணசுந்தரம் மகன் பால்பாண்டியன்(36), அதே பகுதியை சேர்ந்த ராஜாங்கம் (65) ஆகியோரிடம் பல லட்சத்திற்கு விற்பனை செய்ததாகவும் கூறினர்.

இதைத்தொடர்ந்து லாரிகளை திருடியதாக மணிகண்டன், சந்திரமோகன், பாலகுமார் மற்றும் திருடப்பட்ட லாரிகளை விலைக்கு வாங்கியதாக பால்பாண்டியன், ராஜாங்கம் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருநது 4 லாரிகளை பறிமுதல் செய்து விசாரண நடத்தி வருகின்றனர்.


Next Story