அமைச்சர் எம்.சி.சம்பத் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு


அமைச்சர் எம்.சி.சம்பத் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 14 Feb 2017 3:30 AM IST (Updated: 14 Feb 2017 2:25 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் அமைச்சர் எம்.சி.சம்பத் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மிரட்டல்

தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பாக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக அமைச்சர், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சசிகலாவுக்கு ஆதரவான எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூரில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் அமைச்சர், எம்.எல்.ஏ.க்களுக்கு சிலர் மிரட்டல் விடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

போலீஸ் பாதுகாப்பு

அதன்படி கடலூரில் மஞ்சக்குப்பம் செல்வவிநாயகர் கோவில் பின்புறம் ஆக்கர் தெருவில் உள்ள அமைச்சர் எம்.சி.சம்பத் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 2 போலீசார் நேற்று முன்தினம் இரவில் இருந்தே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர அந்த பகுதியில் இரவு நேரத்திலும் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.இது பற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்போது நிலவி வரும் அரசியல் சூழ்நிலை காரணமாக அமைச்சர் எம்.சி.சம்பத் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றார். 

Next Story