கன்னட அமைப்பினர் சாலை மறியல் போராட்டம் 50 பேர் கைது; போக்குவரத்து பாதிப்பு

சாஸ்தான், எஜமாடி சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து கன்னட அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மங்களூரு,
சாஸ்தான், எஜமாடி சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து கன்னட அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 50 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சாலை மறியலால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
முழுஅடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு
உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா அருகே சாஸ்தான் மற்றும் படுபித்ரி அருகே எஜமாடி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுங்கச்சாவடியில் கடந்த ஒரு வாரமாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், உள்ளூர் வாகனங்களுக்கு சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பதை கண்டித்தும், சுங்கச் சாவடியின் பணிகள் முழுமையாக முடிந்த பின்னரே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும் அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும், கன்னட அமைப்பினரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், நேற்று உடுப்பி, குந்தாப்புரா பகுதியில் முழுஅடைப்பு போராட்டத்துக்கு கன்னட அமைப்பினர் அழைப்பு விடுத்திருந்தனர்.
சாலை மறியல்-50 பேர் கைது
ஆனால் முழுஅடைப்பு போராட்டத்துக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை. ஒருசில கடைகள் மட்டுமே பூட்டப்பட்டிருந்தன. மற்ற கடைகள், வணிக வளாகங்கள் வழக்கம்போல செயல்பட்டன. காலையில் உடுப்பி-குந்தாப்புரா இடையே தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. மற்ற பஸ்கள் வழக்கம்போல இயங்கின. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. இந்த நிலையில் எஜமாடி பகுதியில் உள்ள சுங்கச்சாவடி பகுதியில் கன்னட அமைப்பினர் ஊர்வலமாக வந்து தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப்பகுதியில் கடும் போக்கவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கன்னட அமைப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனாலும், அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்துவிட்டனர். இதையடுத்து போலீசார் கன்னட அமைப்பினர் 50 பேரை கைது செய்து குண்டுக்கட்டாக தூக்கி போலீஸ் வேனில் ஏற்றி அங்கிருந்து அப்புறப்படுத் தினார்கள். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோரிக்கை
முன்னதாக போராட்டக் காரர்கள் கூறுகையில், சாஸ்தான், எஜமாடி சுங்கச் சாவடியை சுற்றி 20 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு வசிக்கும் மக்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கக் கூடாது. சுங்கச் சாவடியின் பணிகள் முழுமையாக முடிந்த பின்னரே கட்டணம் வசூலிக்க வேண்டும். உள்ளூர் வாகனங்கள் செல்லும் வகையில் சுங்கச் சாவடி பகுதிகளில் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும். கலெக்டர் வெங்கடேஷ் மவுனத்தை கலைத்துவிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மங்களூரு அருகே சூரத்கல் சுங்கச்சாவடி, எஜமாடி சுங்கச்சாவடி ஆகியவை 10 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இதனால், அவற்றில் ஏதாவது ஒன்றை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
சாஸ்தான், எஜமாடி பகுதியில் கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 10-ந்தேதி முதல் 15-ந்தேதி நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தெக்கட்டே-சிரூர் இடையேயும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Next Story