திருச்சியில் ஓ.பன்னீர்செல்வம், ஜெ.தீபா ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதன் எதிரொலியாக திருச்சியில் ஓ.பன்னீர்செல்வம், ஜெ.தீபா ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
திருச்சி,
சிறை தண்டனை
சசிகலா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை தவிர்த்து அ.தி.மு.க. பொது செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பால் அ.தி.மு.க.வில் பலர் சோகமடைந்தனர். அதே நேரத்தில் சசிகலாவின் எதிர்தரப்பினர் மகிழ்ச்சி அடைந்து பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
சசிகலா மீதான வழக்கில் தீர்ப்பை அறிவதற்காக திருச்சி புத்தூரில் உள்ள மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் அ.தி.மு.க.வினர் திரண்டு இருந்தனர்.
அலுவலகம் வெறிச்சோடியது
இந்த நிலையில் நேற்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு உறுதி செய்யப்பட்டு வெளியான தகவலை தொலைக்காட்சியில் பார்த்த அ.தி.மு.க.வினர் சோகமடைந்தனர். சிறிது நேரத்தில் அலுவலகத்தில் இருந்து ஒவ்வொருவராக சோகத்துடன் வெளியேறினர். ஒரு சிலர் மட்டும் அலுவலகத்தில் அமர்ந்திருந்தனர். அவர்கள் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஒளிபரப்பான செய்திகளை பார்த்துக்கொண்டிருந்தனர். அலுவலக வளாகம் வெறிச்சோடி கிடந்தது.
இதேபோல அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அலுவலகமான திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி அலுவலகத்திலும், அமைச்சர் வளர்மதி அலுவலகமான ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அலுவலகத்திலும் அ.தி.மு.க.வினர் சிலர் கவலையுடன் அமர்ந்திருந்தனர். தொண்டர்கள் கூட்டம் இல்லாமல் இந்த அலுவலகங்கள் வெறிச்சோடி இருந்தன. தீர்ப்பு பற்றி கட்சி நிர்வாகிகள் ஆங்காங்கே நின்று கவலையுடன் பேசிக்கொண்டிருந்தனர்.
பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
அதே நேரத்தில் சசிகலா உள்பட 3 பேருக்கும் தண்டனை விதிக்கப்பட்டதை அறிந்து முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சிலர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். சங்கிலியாண்டபுரத்தில் பட்டாசு வெடித்து இனிப்பும் வழங்கினர். இதேபோல ஜெ.தீபா பேரவை வழக்கறிஞர் பிரிவு மாநில அமைப்பாளர் சாய்நாதன் தலைமையில் வழக்கறிஞர்கள் சிலர் கோர்ட்டு முன்பு பட்டாசு வெடித்து கொண்டாடினர். ஸ்ரீரங்கம், வரகனேரி உள்ளிட்ட இடங்களில் ஜெ.தீபா ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். தி.மு.க.வை சேர்ந்த சிலர் தென்னூர் பகுதியில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
போலீஸ் பாதுகாப்பு
சசிகலா வழக்கில் தீர்ப்பு வெளியானதையொட்டி நேற்று திருச்சி மாநகரில் மத்திய பஸ் நிலையம், சத்திரம் பஸ்நிலையம், ரெயில் நிலையம் மற்றும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். அமைச்சர்கள் தொகுதி அலுவலகம் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பஸ்கள் வழக்கம் போல இயங்கின. கடைகள் அனைத்தும் திறந்து இருந்தன. அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறவில்லை. பொதுமக்கள் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

Next Story