சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனை எதிரொலி: குமரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு ஜெயில் தண்டனை வழங்கப்பட்டதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குமரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நாகர்கோவில்,
பலத்த பாதுகாப்பு
சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என்றும், அவர்களுக்கு நீதிபதி குன்கா அளித்த தீர்ப்பு செல்லும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது.
இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நடக்காமல் தடுக்க தமிழகம் முழுவதும் போலீசார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதுபோல் குமரி மாவட்டத்திலும் போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் உத்தரவின்பேரில் பழைய குற்றவாளிகள் சுமார் 50 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். மேலும் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
1,000 போலீசார்
அந்தந்த போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் போலீசார், ஆயுதப்படை மற்றும் அதிவிரைவு படை போலீசார் என மாவட்டம் முழுவதும் சுமார் 1,000 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மக்கள் அதிகமாக கூடும் இடங்கள், பஸ் நிலையங்கள், பஸ் நிறுத்தங்கள், முக்கிய சந்திப்புகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாகர்கோவிலில் வடசேரி மற்றும் அண்ணா பஸ் நிலையங்கள், நகராட்சி பூங்கா, கலெக்டர் அலுவலகம், செம்மாங்குடி ரோடு, கலெக்டர் அலுவலக சந்திப்பு, கோட்டார், வடசேரி, ஆசாரிபள்ளம், நேசமணிநகர், பீச்ரோடு, செட்டிகுளம், ராமன்புதூர் ஆகிய இடங்களிலும், மார்த்தாண்டம், தக்கலை, இரணியல், குழித்துறை, களியக்காவிளை ஆகிய இடங்களிலும் ரோந்து போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடலோர பகுதி...
கன்னியாகுமரி, குளச்சல் உள்ளிட்ட கடலோர பகுதிகளையும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
இதற்கிடையே மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனின் வீடு மற்றும் அலுவலகம் முன்பும், மாவட்ட பா.ஜனதா அலுவலகம் முன்பும் ஏற்கனவே போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு நேற்று அதிகரிக்கப்பட்டது.
இதுபோல் அ.தி.மு.க. பிரமுகர்கள் வீட்டுகள் முன்பும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Next Story