எஸ்.எஸ்.எல்.சி. தனித்தேர்வர்களுக்கு இணையதளத்தில் ஹால் டிக்கெட் அரசு தேர்வுகள் துறை நெல்லை மண்டல துணை இயக்குனர் தகவல்


எஸ்.எஸ்.எல்.சி. தனித்தேர்வர்களுக்கு இணையதளத்தில் ஹால் டிக்கெட் அரசு தேர்வுகள் துறை நெல்லை மண்டல துணை இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 16 Feb 2017 1:15 AM IST (Updated: 16 Feb 2017 12:42 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதி சீட்டுகளை (ஹால் டிக்கெட்) இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நெல்லை,

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதி சீட்டுகளை (ஹால் டிக்கெட்) இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் துறை நெல்லை மண்டல துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அரசு தேர்வுகள் துறை நெல்லை மண்டல துணை இயக்குனர் (பொறுப்பு) தேவவரம் இனிய வேந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:–

தேர்வுக்கூட அனுமதி சீட்டு

வருகிற மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வு எழுதுவதற்கு ஆன்–லைன் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கான தேர்வுக்கூட அனுமதி சீட்டுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வருகிற மார்ச் மாதம் 7–ந் தேதி வரை ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்வது எப்படி?

மேற்கண்ட இணைய தளத்துக்கு சென்று முதலில் ‘‘HALL TICKET DOWNLOAD’’ என்ற வாசகத்தை சொடுக்கினால் (Click) ஒரு பக்கம் தோன்றும். அந்த பக்கத்தில் உள்ள ‘‘SSLC EXAM MARCH 2017 PRIVATE CANDIDATE HALL TICKET PRINTOUT’’என்ற வாசகத்தை சொடுக்கி, தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்பம் எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் தேர்வுக்கூட அனுமதி சீட்டு திரையில் தோன்றும், அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story