திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் பிரமோற்சவ விழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் பிரமோற்சவ விழா நேற்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
திருவொற்றியூர்,
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமிகள் உடனுறை வடிவுடையம்மன் கோவில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் என்பதால் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.
வடிவுடையம்மன் கோவில் பிரமோற்சவ விழா நேற்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 9-ந்தேதி திருத்தேரோட்டமும், 11-ந்தேதி கல்யாண சுந்தரர்-சங்கிலி நாச்சியார் திருமணமும் நடைபெறுகின்றது. அன்று மாலையில் 63 நாயன்மார்கள் வீதி உலாவும், குழந்தை ஈஸ்வரர் சுந்தரருக்கும்-சங்கிலி நாச்சியாருக்கும் மகிழமரத்தடியில் காட்சி தரும் மகிழடி சேவையும் நடைபெறுகின்றது.
இதையொட்டி 11 நாள் இரவிலும் தியாகராஜ சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் சிவகுமார் மற்றும் நிர்வாகிகள் செய்து உள்ளனர்.

Next Story