மும்பை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு சரக்கு கப்பலில் ரூ.6¼ லட்சம் பொருட்கள் திருட்டு மீனவர்கள் 3 பேர் கைது

மும்பை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு சரக்கு கப்பலில் ரூ.6¼ லட்சம் பொருட்கள் திருடிய 3 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மும்பை,
மும்பை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு சரக்கு கப்பலில் ரூ.6¼ லட்சம் பொருட்கள் திருடிய 3 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பொருட்கள் மாயம்டென்மார்க்கில் இருந்து கடந்த மாதம் சரக்கு கப்பல் ஒன்று பாபா அணு ஆராய்ச்சி மையத்திற்கு யுரேனியம் ஏற்றிக்கொண்டு வந்தது. மும்பை கடல் பகுதியில் வந்தபோது கடலில் வீசிய பலத்த காற்று காரணமாக கப்பல் சேதமடைந்தது.
எனவே அந்த சரக்கு கப்பல் பழுது பார்க்கும் பணிக்காக மும்பை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் கப்பலில் இருந்த ரூ.6 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பிலான சில சிறு எந்திரம் உள்ளிட்ட பொருட்கள் மாயமாகின.
3 மீனவர்கள் கைதுஇது குறித்து எல்லோ கேட் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் போலீசார் மீனவர் சோட்டு லமான்(வயது22) என்பவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அப்பொழுது அவர் டென்மார்க் நாட்டு சரக்கு கப்பலில் மீனவர்கள் இப்ராகிம்(21), ரம்ஜான்(19) ஆகியோருடன் சேர்ந்து திருடியதை பொருட்களை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து போலீசார் 3 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்கள் கப்பலில் திருடிய பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.