‘கன்டெய்னர் லாரி’யை புரட்டிப் போட்ட காற்று!


‘கன்டெய்னர் லாரி’யை புரட்டிப் போட்ட காற்று!
x
தினத்தந்தி 18 March 2017 7:00 PM IST (Updated: 18 March 2017 11:30 AM IST)
t-max-icont-min-icon

கனடாவில் வீசிய பலத்த காற்றில், நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி அப்படியே புரட்டிப் போடப்பட்டு விட்டது.

நெடுஞ்சாலையில் பிற்பகல் நேரத்தில் தெற்கு நோக்கிச் சென்றுகொண்டிருந்த அந்த லாரி, முரட்டுக் காற்றால் அப்படியே சாய்க்கப்பட்டு விட்டது.
இதனால் ஒன்டோரியா மாகாண போலீசார், குறிப்பிட்ட பேர்லிங்டன் விரைவு நெடுஞ்சாலையின் இருபுறத்தையும் மூடிவிட்டனர்.

கடும் காற்று முன்னறிவிப்பு காரணமாக டொரான்டோ மெட்ரோ பகுதி முழுவதும் உஷார்படுத்தப்பட்டிருந்தது.

தென்மேற்குத் திசையில் மணிக்கு 50 முதல் 80 கிலோமீட்டர்கள் வேகத்தில் காற்று வீசும் என்றும், இதனால் கட்டிடங்களும் மரங்களும் பாதிக்கப் படலாம் என்று கனடா வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

எச்சரிக்கையையும் மீறி நெடுஞ்சாலையில் சென்ற கன்டெய்னர் லாரியைத்தான் காற்று புரட்டிப் போட்டுவிட்டது. இச்சம்பவத்தால் குறிப்பிட்ட நெடுஞ் சாலையில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

Next Story