ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்


ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 20 March 2017 4:00 AM IST (Updated: 20 March 2017 2:19 AM IST)
t-max-icont-min-icon

ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

ஜெயங்கொண்டம்,

ஜெயங்கொண்டத்தில் அடிக்கடி சாலையில் நடக்கும் விபத்துகளை தடுக்கும் வகையிலும், சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் வகையிலும் ஜெயங்கொண்டம் போக்குவரத்து காவல்துறை சார்பில் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து செல்வதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தொடங்கி வைத்து ஹெல்மெட் அணிவதன் அவசியத்தையும், அணியாமல் செல்வதால் ஏற்படும் உயிரிழப்பு பற்றியும், அனைவரும் அவசியம் சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் பேசினார். ஊர்வலம் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் தொடங்கி திருச்சிரோடு, பஸ் நிலையம், தா.பழூர் ரோடு வழியாக சென்று மீண்டும் நான்கு ரோட்டில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் போக்குவரத்து காவலர்கள் கண்ணன், குமார், முருகையன், ரத்தினவேல் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story