தூத்துக்குடியில் மினி பஸ் உரிமையாளர்கள் திடீர் வேலை நிறுத்தம்


தூத்துக்குடியில் மினி பஸ் உரிமையாளர்கள் திடீர் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 1 April 2017 2:15 AM IST (Updated: 31 March 2017 11:49 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மினி பஸ் உரிமையாளர்கள் நேற்று திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் மினி பஸ் உரிமையாளர்கள் நேற்று திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலை நிறுத்தம்

தூத்துக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இயங்கி வரும் மினி பஸ்கள் மீது காவல்துறை சார்பில் சமீபகாலமாக அடிக்கடி மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப்படுவதை கண்டித்து, நேற்று மினி பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் திடீர் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

இதனால் தூத்துக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இயங்கி கொண்டிருந்த 45–க்கும் மேற்பட்ட மினி பஸ்கள் நிறுத்தப்பட்டன.

பேச்சுவார்த்தை

இது தொடர்பாக மினி பஸ் உரிமையாளர்களுடனான பேச்சு வார்த்தை தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்தில் நடந்தது. பேச்சு வார்த்தைக்கு தூத்துக்குடி புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு சீமைச்சாமி தலைமை தாங்கினார்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவே, பஸ் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றனர். இதனால் மதியம் 12 மணிக்கு தொடங்கிய வேலை நிறுத்தம் மாலை 3 மணி வரை நடந்தது. பின்னர் போராட்டம் வாபஸ் பெறப்பட்டு வழக்கம் போல் மினி பஸ்கள் இயக்கப்பட்டன.


Next Story