சாரங்கபாணி கோவிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது


சாரங்கபாணி கோவிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 2 April 2017 4:00 AM IST (Updated: 2 April 2017 2:09 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி கோவில் 108 வைணவ கோவில்களில் ஒன்றாகும். பிரசித்தி பெற்ற இக்கோவிலில் சாரங்கபாணி பெருமாளுடன், கோமளவல்லி தாயார் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். கோமளவல்லி தாயாருக்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பங்குனி உத்திர பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்று நிகழ்ச்சியையொட்டி கோமளவல்லி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

தேரோட்டம்

வருகிற 15-ந் தேதி வரை நடைபெற உள்ள பிரம்மோற்சவத்தில் கோமளவல்லி தாயார், கண்ணாடி கமல வாகனம், வெள்ளி சேஷவாகனம், வெள்ளி கருடவாகனம், வெள்ளி ஹம்ச வாகனம், வெள்ளி யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு அலங்கார வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலிக்க உள்ளார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 9-ந் தேதியும், திருக்கல்யாணம் வருகிற 12-ந் தேதியும் நடைபெறுகிறது. 

Next Story