ராணிப்பேட்டை பிஞ்சி ஏரியில் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா தொடக்கம் நீதிபதிகள், கலெக்டர் பங்கேற்பு


ராணிப்பேட்டை பிஞ்சி ஏரியில் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா தொடக்கம் நீதிபதிகள், கலெக்டர் பங்கேற்பு
x
தினத்தந்தி 15 April 2017 4:30 AM IST (Updated: 14 April 2017 9:01 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை பிஞ்சி ஏரியில் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்க விழா நடந்தது. அதில், ஐகோர்ட்டு நீதிபதி உள்பட

சிப்காட்(ராணிப்பேட்டை),

கோர்ட்டு உத்தரவையடுத்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. அதேபோல், ராணிப்பேட்டை பிஞ்சி ஏரியில் வளர்ந்திருந்த சீமைக்கருவேல மரங்கள் ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வக்கீல்கள் மற்றும் பார் அசோசியேசன் மூலமாக அகற்றப்பட்டன.

அதைத்தொடர்ந்து அந்த ஏரியில் 3 ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்ய, ராணிப்பேட்டை வக்கீல்கள் முடிவு செய்தனர். அதன்படி பிஞ்சி ஏரியில் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்க விழா நேற்று நடந்தது. ராணிப்பேட்டை பார் அசோசியேசன் தலைவர் வக்கீல் சங்கரன் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் ஜெயக்குமார் வரவேற்றார்.

பணிகள் தொடக்கம்

விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி முரளிதரன், மாவட்ட முதன்மை நீதிபதி ஆனந்தி, முதன்மை குற்றவியல் நீதிபதி தட்சிணாமூர்த்தி, ராணிப்பேட்டை எம்.எல்.ஏ., ஆர்.காந்தி, வேலூர் மாவட்ட கலெக்டர் ராமன், வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, மரக்கன்றுகளை நட்டு, 3 ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்யும் பணிகளை தொடங்கி வைத்தனர்.

விழாவில் ராணிப்பேட்டை சார்பு நீதிபதி தஸ்நிம், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதிகள், ராணிப்பேட்டை சாண்டில்யன், வாலாஜா முனிராஜ், ஆற்காடு பிரபாதாமஸ், வேலூர் தொழிலாளர் நல நீதிபதி உமாமகேஸ்வரி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு உமாசங்கர், ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், நகர சபை ஆணையாளர் பாரிஜாதம், வாலாஜா தாசில்தார் பிரியா உள்பட பல்வேறு துறை அதிகாரிகள், வக்கீல்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் பிரசன்னகுமார் நன்றி கூறினார்.


Next Story