கொடிக்கம்பத்தை அகற்றியதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்
கொடிக்கம்பத்தை அகற்றியதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் 10 பேர் கைது
உத்தமபாளையம்
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகேயுள்ள அனுமந்தன்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் கொடிக்கம்பம் புதிதாக வைக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டு இருந்த கொடிகம்பத்தை அகற்றினர். இதனால் ஆத்திரம் அடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், மாவட்ட செய்திதொடர்பாளர் பாரதி தலைமையில் உத்தமபாளையம் –கம்பம் சாலையில் திடீரென்று மறியலில் ஈடுபட்டனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட 10 பேரை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story