தொழில்அதிபரிடம் ரூ.10 கோடி லஞ்சம் தனியார் தொலைக்காட்சி நிறுவன அதிகாரி உள்பட 2 பேர் கைது

அவதூறு செய்தி வெளியிடாமல் இருக்க தொழில் அதிபரிடம் ரூ.10 கோடி லஞ்சம் வாங்கிய தனியார் தொலைக்காட்சி நிறுவன அதிகாரியையும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது உதவியாளரையும் போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு,
அவதூறு செய்தி வெளியிடாமல் இருக்க தொழில் அதிபரிடம் ரூ.10 கோடி லஞ்சம் வாங்கிய தனியார் தொலைக்காட்சி நிறுவன அதிகாரியையும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது உதவியாளரையும் போலீசார் கைது செய்தனர்.
அதிகாரிபெங்களூருவில் உள்ள தனியார் கன்னட தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் முதன்மை செயல் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் லட்சுமி பிரசாத் வாஜ்பாய்(வயது 42). இவர், தொழில்அதிபர் ஒருவரை தொடர்பு கொண்டு அவரை பற்றி அவதூறாக செய்தி வெளியிடப்போவதாக கூறியுள்ளார். மேலும், அவதூறு செய்தி வெளியிடாமல் இருக்க ரூ.15 கோடி லஞ்சமாக கொடுக்க வேண்டும் என மிரட்டியுள்ளதாக தெரிகிறது.
இதனால், அதிர்ச்சி அடைந்த தொழில்அதிபர் சம்பவம் குறித்து கோரமங்களா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கொண்டனர். மேலும், போலீசார் தொழில்அதிபருக்கு சில அறிவுரைகளை கூறினர்.
கைதுஅந்த அறிவுரையின்படி நேற்று முன்தினம் இரவு தொழில்அதிபர் முதற்கட்டமாக ரூ.10 கோடியை எடுத்து லட்சுமி பிரசாத் வாஜ்பாயிடம் கொடுக்க அலுவலகத்துக்கு சென்றார். அப்போது, அந்த பணத்தை அவருடைய உதவியாளர் மிதுன் வாங்கினார். இந்த வேளையில், அங்கு மறைந்து இருந்த போலீசார் மிதுனை கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும், லட்சுமி பிரசாத் வாஜ்பாயையும் போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதான லட்சுமி பிரசாத் வாஜ்பாய் மீது ஏற்கனவே 2 போலீஸ் நிலையங்களில் இதேபோல் லஞ்ச வழக்குகள் பதிவாகி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.