குழாய் வால்வு சேதமடைந்ததால் வெளியேறி வீணாகும் குடிநீர்
பெரம்பலூரில் குடிநீர் குழாய் வால்வு சேதமடைந்ததால் அதில் குடிநீர் வெளியேறி வீணாகிறது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே சோமாண்டபுதூரில் உள்ள கிணற்றில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அசோக்நகர் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் தேக்கி வைக்கப்பட்டு, அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெரம்பலூரில் கோனேரிபாளையம் செல்லும் சாலையின் ஓரமாக செல்லும் குடிநீர் குழாயில் உள்ள வால்வு நேற்று சேதமடைந்ததால், அதன் வழியாக தண்ணீர் பீறிட்டு வெளியேறி அப்பகுதியில் தேங்குகிறது. இதைக்கண்ட அவ்வழியாக சென்ற சிலர், குழாயின் வால்வில் இருந்து வெளியேறிய தண்ணீரில் குளித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், தண்ணீர் வீணாவதை தடுக்க நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க முயன்றனர். ஆனால் யாரையும் தொடர்பு கொள்ள முடியாததால், சேதமடைந்த குழாய் வால்வை எப்படி சரி செய்வது? என்று தெரியாமல் வேதனை அடைந்தனர்.
கட்டுப்பாட்டு அறை
இது குறித்து அவர்கள் கூறுகையில், தற்போது கடும் வறட்சியால் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் குடிநீர் வீணாவது வருத்தமளிக்கிறது. சேதமடைந்த குடிநீர் குழாய் வால்வினை சரி செய்ய நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை, குடிநீர் விரயமாதல், சேதமடைந்த ஆழ்குழாய் கிணறு- குடிநீர் தொட்டியை சரி செய்தல் உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்கள் எளிதில் புகார் தெரிவிக்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்க வேண்டும். மேலும் அந்த கட்டுப்பாட்டு அறையை 24 மணி நேரமும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளும்படி இயங்க செய்ய வேண்டும், என்று கோரிக்கை விடுத்தனர்.

Next Story