பள்ளிக்கூடம் அருகே திறக்க எதிர்ப்பு: மதுக்கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

வண்டலூர் பகுதியில் பள்ளிக்கூடம் அருகே திறக்க எதிர்ப்பு தெரிவித்து, மதுக்கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வண்டலூர்,
வண்டலூர் அருகே வேங்கடமங்கலம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே நேற்று இரவு தனியார் வாடகை கட்டிடத்தில் புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டது.
தகவல் அறிந்த வேங்கடமங்கலம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட 100–க்கும் மேற்பட்டவர்கள் பள்ளி அருகே மதுக்கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மதுக்கடை ஊழியர்கள் கடையை மூடிவிட்டு தப்பி ஓடி விட்டனர்.
தகவல் அறிந்த தாழம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது
பள்ளிக்கூடம் அருகில் மதுக்கடை திறக்கப்படாது என்று போலீசார் உறுதி அளித்தனர். இதன்பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் நிருபர்களிடம் கூறியதாவது:–
கலெக்டர் உத்தரவு
அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் பஸ் நிறுத்தம், குடியிருப்புகள் மத்தியில் மதுக்கடையை அவசர அவசரமாக திறந்து உள்ளனர். இதனால் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தோம். மீண்டும் கடையை திறந்தால் தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.
இந்த மதுக்கடையை உடனே மூடுவதற்கு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story