குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 17 April 2017 4:15 AM IST (Updated: 17 April 2017 3:21 AM IST)
t-max-icont-min-icon

லால்குடி அருகே உள்ள கீழப்பெருங்காவூர் ஊராட்சியில் குடிநீர் முறையாக வழங்காததால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர். இதையடுத்து நேற்று முன்தினம் பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் காலிக்குடங்களுடன் மாந்துறை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந

லால்குடி,

லால்குடி அருகே உள்ள கீழப்பெருங்காவூர் ஊராட்சியில் குடிநீர் முறையாக வழங்காததால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர். இதையடுத்து நேற்று முன்தினம் பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் காலிக்குடங்களுடன் மாந்துறை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த லால்குடி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story