கிராம நிர்வாக அலுவலரை தாக்கியவர் கைது

கிராம நிர்வாக அலுவலரை தாக்கியவர் கைது
நெல்லை டவுன் குற்றாலம் ரோட்டை சேர்ந்த சேக் மைதீன் மகன் ஜாகீர் உசேன்(வயது 35). இவர், ஏர்வாடியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் பாளையங்கோட்டை அம்பிகா தெருவில் உள்ள நண்பரை பார்த்து விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த அப்பாக்குட்டி(38), ஜாகீர் உசேனை வழிமறித்து செல்போன் மற்றும் பணத்தை பறிக்க முயன்றார். அதை தடுக்க முயன்ற ஜாகீர் உசேனை, அப்பாக்குட்டி செங்கலால் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த ஜாகீர் உசேன் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பாக்குட்டியை கைது செய்தனர்.
Next Story