மின்சாரத்துறையில் உள்ள 40 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும்

மின்சாரத்துறையில் உள்ள 40 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும் என்று மின்சார தொழிலாளர் சம்மேளன கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
ஈரோடு,
தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளனத்தின் மண்டல சிறப்பு கூட்டம் நேற்று ஈரோட்டில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில இணைச்செயலாளர் வி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். வட்ட தலைவர்கள் நடராஜ் (கோபி), சுப்பிரமணியம் (ஈரோடு), இணைச்செயலாளர் சிவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
மாநில பொதுச்செயலாளர் வி.ராமச்சந்திரன், தலைவர் சி.வீரராகவன், பொருளாளர் எம்.தங்கவேல் ஆகியோர் பேசினார்கள்.
காலிப்பணியிடங்கள்
அதைத்தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீ£மானங்கள் வருமாறு:–
ஊதிய உயர்வு காலதாமதமின்றி பேசித்தீர்த்திடவேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளப்படுத்திட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டங்களை அமல்படுத்த வேண்டும். பதவி உயர்வு முரண்பாடுகளை கலைந்திட வேண்டும். தமிழகம் முழுவதும் மின்சாரத்துறையில் உள்ள 40 ஆயிரம் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக மாநில பொதுச்செயலாளர் வி.ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறும்போது, ‘தமிழ்நாடு முழுவதும் மின்சாரத்துறையில் தினக்கூலி தொழிலாளர்களாக 7 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களுக்கு தினக்கூலியாக ரூ.312 வழங்கப்படுகிறது. ஆனால் ஒப்பந்ததாரர்கள் தினக்கூலி தொழிலாளர்களுக்கு ரூ.150 மட்டுமே வழங்குகிறார்கள். இதனால் கம்பம் நடும் பணி, புதிய மின் இணைப்பு வழங்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்படுகிறது. எனவே தினக்கூலி தொழிலாளர்களுக்கு ஒப்பந்ததாரர்கள் நாள் ஒன்றுக்கு ரூ.312 வழங்கவேண்டும்.’ என்றார்.
இதில் ஈரோடு வட்ட பொருளாளர் அய்யாசாமி, மேட்டூர் வட்ட துணைத்தலைவர் ஷாஜஹான், நாமக்கல் வட்ட கோட்ட நிர்வாகி கருப்பண்ணன் மற்றும் ஈரோடு, கோபி, சேலம், மேட்டூர், நாமக்கல் வட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.

Next Story