அரசின் அறிவிப்புகளை தெரிவிக்காததை கண்டித்து வேளாண் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை


அரசின் அறிவிப்புகளை தெரிவிக்காததை கண்டித்து வேளாண் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
x
தினத்தந்தி 18 April 2017 5:00 AM IST (Updated: 18 April 2017 1:22 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூரில், வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

வேடசந்தூர்,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம், இடுபொருட்கள், சொட்டுநீர் பாசனம் அமைத்தல், விவசாய கருவிகள் உள்ளிட்டவை இந்த அலுவலகம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர விவசாயிகளுக்கு சாகுபடி செய்யப்படும் பயிர்கள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

இந்தநிலையில் நல்லமனார்கோட்டை பகுதியை சேர்ந்த விவசாயிகள், தங்களுக்கு கிடைக்கவேண்டிய சலுகைகள் முறையாக கிடைக்கவில்லை என்றும், மானிய விலையில் வழங்கப்படும் பொருட்கள் குறித்து முறையாக அதிகாரிகள் தகவல் தெரிவிப்பதில்லை என்றும் குற்றம் சாட்டினர்.

முற்றுகை

அரசு சலுகைகள் மற்றும் அறிவிப்புகளை தெரிவிக்காத அதிகாரிகளை கண்டித்து நல்லமனார்கோட்டை விவசாயிகள் நேற்று வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த வேளாண்மைத்துறை அதிகாரிகள், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது விவசாயிகள், அரசின் சலுகைகள் அனைத்து விவசாயிகளுக்கும் முறையாக கிடைப்பதில்லை. ஒரு சிலர் மட்டுமே பயன்பெற்று வருகின்றனர். மேலும் இதுகுறித்து முறையாக தகவல்கள் தெரிவிப்பதில்லை என்று புகார் தெரிவித்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story