அய்யம்பேட்டையில் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்


அய்யம்பேட்டையில் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 April 2017 3:45 AM IST (Updated: 18 April 2017 2:23 AM IST)
t-max-icont-min-icon

அய்யம்பேட்டையில் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்தது

அய்யம்பேட்டை,

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய-மாநில அரசுகளை கண்டித்து அய்யம்பேட்டையில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் தூயவன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ஜாகீர், ஒன்றிய பொறுப்பாளர் ஜமால்முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஆன்றோர் பேரவையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், மாவட்ட இணை செயலாளர்கள் ருத்ரன், தம்பி கரிகாலன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. முடிவில் அய்யம்பேட்டை நகர செயலாளர் நிக்சன் நன்றி கூறினார். 

Next Story