திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோவில் சரபேஸ்வரர் வெள்ளி தேரில் வீதி உலா
திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோவில் சரபேஸ்வரர் வெள்ளி தேரில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவிடைமருதூர்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான கம்பகரேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சரபேஸ்வரர் தனி சன்னதியில் அருள்பாலித்து வருவது சிறப்பு அம்சம் ஆகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் ருத்திர பாத திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ருத்திர பாத திருவிழா கடந்த மாதம் (மார்ச்) 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவில் திருக்கல்யாண உற்சவம், தேரோட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து சரபேஸ்வரர் உற்சவம் நடைபெற்றது. இதில் சரபேஸ்வரர் வெள்ளி தேரில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி தருமபுரம் ஆதீனம் இளைய சந்நிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் முன்னிலையில் நடந்தது.
திரளான பக்தர்கள்
அப்போது வெள்ளி தேரில் வீதி உலா வந்த சரபேஸ்வரரை திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Next Story