ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 17 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நடத்தினர்


ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 17 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நடத்தினர்
x
தினத்தந்தி 19 April 2017 4:30 AM IST (Updated: 19 April 2017 2:12 AM IST)
t-max-icont-min-icon

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் 17 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருச்சி,

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில துணை தலைவரும், திருச்சி மாவட்ட தலைவருமான ப.அருள்ஜோஸ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மு.நடராஜன் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை வாபஸ் பெற்று பழைய ஓய்வூதிய திட்டத்தை 2004-ம் ஆண்டு முதல் கணக்கிட்டு வழங்கவேண்டும், 7-வது ஊதிய குழு பரிந்துரைகளை மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு 1.1.2016 முதல் அமல்படுத்த வேண்டும், மாதாந்திர மருத்துவ படியினை ரூ.1000 ஆக உயர்த்தி வழங்கவேண்டும், குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ. 1 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.

வறட்சி நிவாரணம்

விவசாயிகளுக்கு உரிய வறட்சி நிவாரணம் வழங்கவேண்டும், ஆற்று மணல், இயற்கை வளங்கள் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும், திருச்சி மாவட்டத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை உடன் நிறைவேற்ற வேண்டும், 35 ஆண்டுகளுக்கும் மேலாக அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற வருவாய் கிராம உதவியாளர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கோரிக்கைகளை விளக்கி மாவட்ட பொருளாளர் சந்திரசேகரன், மாவட்ட துணை தலைவர்கள் ஆர்தர் காட்வின், இணை செயலாளர் அண்ணாதுரைஆகியோர் பேசினார்கள். 

Next Story