தூத்துக்குடியில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு நாள் அனுசரிப்பு
தூத்துக்குடியில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவுநாளையொட்டி, அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்தும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவுநாளையொட்டி, அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்தும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
நினைவுநாள்தூத்துக்குடியில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் 4–ம் ஆண்டு நினைவுநாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது. தூத்துக்குடி வி.இ.ரோட்டில் காமராஜர் சிலை அருகே டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. தட்சணமாற நாடார் சங்கம் சார்பில் முன்னாள் துணை தலைவர் எம்.எஸ்.ஏ.பீட்டர் ஜெபராஜ் தலைமை தாங்கி, அஞ்சலி செலுத்தினார். சங்க முன்னாள் நிர்வாகிகள் டி.ஜெயக்கொடி, தனஞ்செயன், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி முன்னாள் இயக்குனர்கள் சி.எஸ்.ராஜேந்திரன், டி.ஆர்.தமிழரசு, உப்பு உற்பத்தியாளர் சங்க செயலாளர் தனபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாநகர டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் மாநகர செயலாளர் ஐ.பி.பாலசேகர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் தூத்துக்குடி ஒன்றிய டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தி.மு.க.–காங்கிரஸ்தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. சார்பில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் அலங்கரிக்கப்பட்ட உருவப்படத்துக்கு மாநில தி.மு.க. மகளிர் அணி துணை செயலாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தலைமை செயற்குழு உறுப்பினர் திருச்சிற்றம்பலம், மாநகர செயலாளர் எஸ்.ஆர்.ஆனந்தசேகரன், முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் சார்பில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட வர்த்தக பிரிவு காங்கிரஸ் தலைவர் டேவிட் பிரபாகரன், பாரகன் அந்தோணிமுத்து மற்றும் நிர்வாகிகள் முத்துராஜன், ராஜலிங்கம், மிக்கேல்குரூஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
த.மா.கா.தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில், மாவட்ட தலைவர் பி.கதிர்வேல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில், மாநில துணை தலைவர் பா.விநாயக மூர்த்தி, மாவட்ட செயலாளர் பாஸ்கர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிர்வாகிகள் செந்தில் ஆறுமுகம், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஐக்கிய வியாபாரிகள் சங்கம்தூத்துக்குடி ஐக்கிய வியாபாரிகள் சங்கம் சார்பில் தலைவர் கே.சிம்சன், செயலாளர் கே.ஜெயராமச்சந்திரன், பொருளாளர் அன்புராஜ், நிர்வாகிகள் உத்தரப்பாண்டி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். தூத்துக்குடி மாவட்ட காமராஜர் நாடார் பேரவை தலைவர் தங்கதுரை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.