திருச்செந்தூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வியாபாரி பலி

திருச்செந்தூர் அருகே உள்ள பரமன்குறிச்சியை அடுத்த அரங்கன்விளையைச் சேர்ந்தவர் அருள்ராமன் (வயது 40). இவர் ரியல் எஸ்டேட் தொழிலும், தேங்காய் வியாபாரமும் செய்து வந்தார்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் அருகே உள்ள பரமன்குறிச்சியை அடுத்த அரங்கன்விளையைச் சேர்ந்தவர் அருள்ராமன் (வயது 40). இவர் ரியல் எஸ்டேட் தொழிலும், தேங்காய் வியாபாரமும் செய்து வந்தார். இவருடைய மனைவி சரவணகுமாரி (35). இவர்களுக்கு திருமுருகன் (8), தினேஷ்குமார் (7) ஆகிய 2 மகன்களும், சுஜா (6) என்ற மகளும் உள்ளனர்.
நேற்று மதியம் அருள்ராமன் திருச்செந்தூரில் முடிவெட்டி விட்டு, மோட்டார் சைக்கிளில் தனது ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். திருச்செந்தூரை அடுத்த காந்திபுரம்– தளவாய்புரம் இடையே காட்டு பகுதியில் வளைவில் திரும்பியபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று திடீரென்று மோட்டார் சைக்கிளின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் சாலையோரம் தூக்கி வீசப்பட்ட அருள்ராமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், திருச்செந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த அருள்ராமனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story