க.பரமத்தி-அரவக்குறிச்சியில் குடிநீர் திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு

க.பரமத்தி-அரவக்குறிச்சியில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப்பணிகளை கலெக்டர் கோவிந்தராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
க.பரமத்தி,
க.பரமத்தி, அரவக்குறிச்சி பகுதிகளுக்கு கரூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் வருகை தந்தார். அவர் அந்த பகுதிகளில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். க.பரமத்தி ஒன்றியம், தாதம்பாளையம், காசிப்பாளையம் ஆகிய பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நட்டு தினசரி தண்ணீர் ஊற்றி பராமரிக்கும் பணி நடந்து வருகிறது.
அதே போல் நஞ்சைகாளிகுறிச்சியில் ஆழ்குழாய் கிணறு அமைத்தல், மேகரை ஆதிதிராவிடர் காலனியில் வறட்சி நிவாரணதிட்டத்தின் கீழ் ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் கீழ்நிலை நீர்தேக்கத்தொட்டி அமைத்தல், புஞ்சை காளிக்குறிச்சி, வெங்ககல்பட்டி ஆகிய பகுதிகளில் பல்வேறு குடிநீர் திட்டப்பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நடவடிக்கை
சட்டமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் புதுப்பட்டியில் ரூ.4 லட்சத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்தல், ராவுத்தன்பட்டியில் ரூ.3 லட்சத்து 31 ஆயிரத்தில் ஆழ் குழாய் அமைத்தல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் கலெக்டர் கோவிந்தராஜ் நிருபர்களிடம் கூறும்போது, கரூர் மாவட்டம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க ஆழ்குழாய் கிணறுகள் ஆழப்படுத்தப்பட்டு வருகிறது. அதே போன்று புதிதாக ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதே போன்று பொதுமக்கள் குடிநீர் வேண்டி கோரிக்கை வைக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார். ஆய்வின் போது, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா உள்பட அதிகாரிகள் பலர் உடன் சென்றனர்.

Next Story