மீனாட்சிஅம்மன் திருக்கல்யாணத்திற்கு சென்ற முருகப்பெருமான் பூப்பல்லக்கில் திருப்பரங்குன்றம் திரும்பினார்


மீனாட்சிஅம்மன் திருக்கல்யாணத்திற்கு சென்ற  முருகப்பெருமான் பூப்பல்லக்கில் திருப்பரங்குன்றம் திரும்பினார்
x
தினத்தந்தி 12 May 2017 4:45 AM IST (Updated: 11 May 2017 10:18 PM IST)
t-max-icont-min-icon

மீனாட்சிஅம்மன் திருக்கல்யாணத்திற்கு சென்ற முருகப்பெருமான் பூப்பல்லக்கில் திருப்பரங்குன்றம் திரும்பினார்.

திருப்பரங்குன்றம்,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முத்திரை பதிக்கும் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. திருவிழாவின் முத்தாய்ப்பாக மீனாட்சி அம்மன்– சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திருப்பரங்குன்றம் கோவிலில் இருந்து பவளக்கனிவாய்பெருமாள் கலந்துகொண்டு தனது தங்கையான மீனாட்சி அம்மனுக்கு சுந்தரேசுவரை தாரை வார்த்தை கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதற்காக திருப்பரங்குன்றம் கோவிலில் இருந்து பவளக்கனிவாய்பெருமாள், தெய்வானையுடன் முருகப்பெருமான் திருப்பரங்குன்றத்தில் இருந்து புறப்பட்டு மதுரை சென்று திருமணத்தில் பங்கேற்றனர்.

பூப்பல்லக்கு

இந்த நிலையில் பவளக்கனிவாய்பெருமாள் மற்றும் தெய்வானை, முருகப்பெருமான் நேற்று மதியம் வரை மதுரையில் தங்கி இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் நேற்று மாலையில் மதுரையில் இருந்து பூப்பல்லக்கில் முருகப்பெருமான் திருப்பரங்குன்றம் திரும்பினார். விஷேச பூப்பல்லக்கில் பவளக்கனிவாய்பெருமாளும் ஊருக்கு திரும்பினார். இதனையொட்டி வழிநெடுகிலுமாக 100–க்கும் மேற்பட்ட இடங்களில் திருக்கண் அமைத்து பக்தர்கள் வழிபட்டனர்.


Next Story