சேவை மனப்பான்மையுடன் டாக்டர்கள் பணியாற்ற வேண்டும் திருவாரூர் மருத்துவகல்லூரி முதல்வர் பேச்சு


சேவை மனப்பான்மையுடன் டாக்டர்கள் பணியாற்ற வேண்டும் திருவாரூர் மருத்துவகல்லூரி முதல்வர் பேச்சு
x
தினத்தந்தி 14 May 2017 12:47 AM IST (Updated: 14 May 2017 12:47 AM IST)
t-max-icont-min-icon

சேவை மனப்பான்மையுடன் டாக்டர்கள் பணியாற்ற வேண்டும் என திருவாரூர் மருத்துவகல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம் கூறினார்.

திருவாரூர்,

திருவாரூர் அரசு மருத்துவகல்லூரியில் விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதை தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு மருத்துவகல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

விளையாட்டு போட்டிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள மாணவர்கள் தங்கள் தனித்திறமையை காட்ட வேண்டும். கல்வியுடன், விளையாட்டிலும் ஆர்வம் காட்ட வேண்டும். விளையாட்டினால் உடல் புத்துணர்வு பெறுகிறது. சேவை மனப்பான்மையுடன் டாக்டர்கள் பணியாற்றிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் பொது மேலாளர் குருராஜன், கேரம் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் பெற்ற மரியஇருதயம், முன்னாள் தேசிய கூடை பந்தாட்ட வீரரும், மயக்க டாக்டருமான ஜான்செல்வகுமார், முன்னாள் மாநில கூடை பந்தாட்ட வீரரும், மயக்க டாக்டருமான ரவிச்சந்திரன், மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் வெற்றிவீரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story