எட்டயபுரத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி கிராம மக்கள் மறியல் செய்ய முயற்சி


எட்டயபுரத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி கிராம மக்கள் மறியல் செய்ய முயற்சி
x
தினத்தந்தி 15 May 2017 12:03 AM IST (Updated: 15 May 2017 12:03 AM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி கிராம மக்கள் மறியல் செய்ய முயன்றனர்.

எட்டயபுரம்,

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியில் நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த 3 டாஸ்மாக் கடைகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டன. இந்த நிலையில் எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பள்ளியின் பின்புறத்தில், புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனால் அங்கு மது பிரியர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், டாஸ்மாக் கடையை மூடக்கோரியும் எட்டயபுரம் இளம்புவனம் கிராமத்தை சேர்ந்த மக்கள் தூத்துக்குடி-கோவில்பட்டி சாலையில் மறியல் போராட்டம் செய்ய முயன்றனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த எட்டயபுரம் போலீசார் மறியலில் ஈடுபட முயன்ற கிராம மக்களை அங்குள்ள சமுதாய கூடத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்களுடன் தாசில்தார் பாக்கியலட்சுமி பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், கிராம மக்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story